A collection of my tamil kavithaigal

Since i wanted to file my collection of tamil kavithaigal which i wrote an year back and the kavithaigal which i liked the most, am posting it as a post in my blog

வாழ்க்கை – ஒரு கண்ணாடி

May 28, 2013 at 7:10pm
என் வீட்டுக்  கண்ணாடியில் என் முகம் தேட
அது என்னை திரும்பிப்  பார்த்து சிரித்தது
பார் நான் உன்னை எவ்வளவு நன்றாக
பார்க்கிறேன்…
ஏன் உன்னால் என்னை அவ்வளவு கூர்மையாக
பார்க்க முடியவில்லை
அவ்வார்த்தைகளைக் கேட்டு நான் ஸ்தம்பித்து நின்றேன்…
அப்புறம் தான் புரிந்தது நான் என் மனதில் தேவையற்ற
நினைவுகளால் சூழ்ந்துள்ளேன்…
அதான் என்னால் என்னை கண்டு கொள்ள முடியவில்லை கண்ணாடியில்!!!
நமது மனதை யார் தெளிவாக புரிந்து கொள்கிறாரோ இல்லையோ
கண்ணாடி தான் நம் முகத்தின் உண்மையான பிரதிபலிப்பு…..
_ _ _ _ _ _

படித்ததில் பிடித்த கவிதை

March 4, 2013 at 4:43pm

கருவறை கடிதம்

என் இனிய உயிர் துளியே,

வாழ்க்கை என்பது முழுமை பெறுவது

மழலை செல்வத்தில்தான் என்பது புரிய,

கண்ணீரை காணிக்கையாக்கிய

நாட்கள் எத்தனை எத்தனையோ

திருமணமாகி எட்டு வருடங்கள்

கருவறை காலியாக இருக்க

உற்றார் உறவினரின் பரிதாபப் பார்வை,

ஊர் கூடிய விசேஷத்தில்

ஒதுங்கி நின்ற தருணங்கள்

எத்தனை எத்தனையோ,

உன்னை தேடித்தேடி அலுத்து

கடவுளை நிந்தித்த நாட்கள்

எத்தனை எத்தனையோ,

என் கண்ணில் படுவோர் எல்லாம்

குழந்தைகளுடன் குதூகலமாக செல்ல,

என் விழித்திரைகள் எனக்காக

கண்ணீரை சொரிந்த தருணங்கள்

எத்தனை எத்தனையோ

வாழ்வு என்பது எல்லாம் இருந்தும்

இவ்வளவு வெறுமையாக தோன்றுமா?

எனக்கு தோன்றியது

இதோ எட்டு வருட கனவுகள்

நனவாகும் நாள் வந்துவிட்டது.

மனதில் சந்தோசம் நிரம்பி வழிகிறது,

என் கருவறைக்குள் நீ வந்துவிட்டாய்

வரமறுத்த உன்னை வரவழைத்து விட்டேன்

இயற்கையாக என் கருவில்

உயிர்பெற வேண்டிய நீ

எங்கோ ஒரு பரிசோதனைக்  கூடத்தில்

உயிர்பெற்று

என் கருவறைக்கு குடிபெயர்ந்து விட்டாய்

உன்னை சந்தோஷப்படுத்தி

உன் தேவைகளை பூர்த்தி செய்து

என் வாழ்வின் ஒளியாக

உன்னை நினைத்து வாழ்வேன்

என் கனவுகளை உன்னில்  திணிக்காமல்

நீ டாக்டராக, என்ஜினீயராக  என்று

எந்த எதிர்ப்பார்ப்பில்லாமல்

நீ, நீயாக வாழ

உன் எண்ணங்கள் உன் கனவுகளுடன்

சுதந்திர பிரஜையாக வாழ

உறுதுணையாக இருப்பேன்.

என்னிடமிருக்கும் நல்லவைகளை

உன்னிடம் புகுத்துவேன்

என் மகனே! மகளே!

என்னை தாயாக்கிய உனக்கு

என் வேதனைகளை நீக்கிய உனக்கு

என்றுமே பூரண தாயாக

வாழ்வேன் என்று உறுதிமொழி கொடுக்கிறேன்.

உயிர்துளியான நீ குழந்தையாக

உருவாகும் அந்த பத்து மாதங்களும்

என் பிரார்த்தனை உன்னில்

ஒலித்துக் கொண்டே இருக்கும்”

_ _ ____________________

கவிதைகள் – என் முயற்சி தொடர்கிறது

November 29, 2012 at 7:33pm

1.பகல் ஏன் தான் வருகிறது என்று நினைப்பதுண்டு

அதன் பின் இரவு வந்தால் தானே ஒரு விடியல் பிறக்கும்

ஆண்டவனின் படைப்பே சுவாரஸ்யமானது தான்…..

பகல் – இரவு, சந்தோஷம்- துக்கம், இனிப்பு-கசப்பு!

இதை அனுபவிக்க நமக்கு தான் நேரம் இல்லையோ?

2.கலை ஆர்வம் என்பது ஒன்றன் பின் ஒன்று முளைத்த சிறகா?

நீண்டு கொண்டே செல்கிறதே?

இதற்கு அளவுகோல் தான் என்ன?

ஒன்றுகொன்று போட்டி போட்டுக் கொண்டு

மனதை கொள்ளை அடித்து செல்கிறதே!!!

3.வீட்டுக் கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம்

ஒரு கேள்வி வருவதுண்டு…

நம் உள்மனதை காட்டிக் குடுக்குமோ என்று?

ஏனென்றால் நம்மை முழுமையாய் அறிந்தவை அது ஒன்று தானே!

4.வாசலில் கோலம் போடும் போதெல்லாம் காக்கை

வந்து அரிசி மாவு உண்ணும் பழக்கம் உண்டு

ஆனால் அது வராத போது ஏன் என்று நினைப்போம்?

அப்போது தான் தோன்றியது நாம் காக்கைக்கு தினமும்

உணவு வைத்து விட்டு உணவு உண்ண ஆரம்பிக்கிறோமா  என்று?

5.காதலுக்காக அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட்

பேர் சொல்லுவார்கள்…..ஆனால் இன்று

நீதிமன்ற படிகளில் அல்லவா உண்மை காதலை

தேடிக் கொண்டு இருக்கிறார்கள்?

6.இறங்குவதும் ஏறுவதும் தான் வாழ்க்கை

இவ்விரண்டிற்கும் காரணத்தை தெரிந்து கொண்டு

புரிந்து நடந்தால் வாழ்க்கை இன்பமயம் தான்

7.வானம் போல் தன் வாழ்க்கையில் உயர்ந்த

நோக்கம், சிந்தனைகள் உடையவன்

தான் நினைத்ததை சாதிக்கிறான்.

8.எனக்காய் துடித்த இதயம்

அது உனது மட்டுமே

என் சந்தோசம், படிப்பு

கல்யாணம்……

என்னுடைய முதல் தோழியாய்

இருந்து என்னை

கரை சேர்த்தவள் நீ!

அம்மாவின் இதயம் பற்றி

சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன?

Advertisements

2 thoughts on “A collection of my tamil kavithaigal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s